Asianet News TamilAsianet News Tamil

S. Ve. Shekher has corona : நடிகர் எஸ்.வி.சேகருக்கும் கொரோனா..பிரபலங்களை குறிவைத்து தாக்கும் வைரஸ்..

S. Ve. Shekher has corona : பிரபல நடிகரும்..அரசியல் பிரமுகருமான  எஸ்.வி.சேகர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளார்.. தொடர்ந்து பிரபலங்களை கோவிட் -19 குறிவைத்து தாக்கி வருகிறது.. 

S. Ve. Shekher has corona effect
Author
Chennai, First Published Jan 23, 2022, 12:54 PM IST

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்துவருகின்றன. 3ம் அலைக்கான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 31ம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகத்தில் மின்னல் வேகத்தில் இருந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த 6ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 சினிமா பிரபலங்கள் பலருக்கும் கொரோனா உறுதியாகிவருகிறது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன், பாடகர் சோனு நிகாம் மற்றும் நடிகை த்ரிஷா நடிகர் சத்யராஜ், இயக்குனர் பிரியதர்ஷன், அருண்விஜய், குஷ்பூ, சுரேஷ் கோபி, ஜெயராம், துல்கர்சல்மான்  என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவர்களில் பலரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். அதோடு பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ஆபத்தான நிலையில் icu -வில் சிகிச்சை பெற்று வருகிறார்..

S. Ve. Shekher has corona effect

இவரை தொடர்ந்து பிரபல இயக்குனரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளதாக ட்வீட்டரில் அறிவித்துள்ளார்... இந்நிலையில் சினிமா பிரபலமும், அரசியல் பிரமுகருமான  எஸ் வி சேகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்..

S. Ve. Shekher has corona effect

இது குறித்து பகிர்ந்துள்ள எஸ்.வி.சேகர்... தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர், இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்ட பிறகும் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டு விட்டதால் டாக்டர்களின் அறிவுரையின் பேரில் தான் வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios