தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் எஸ்.வி.சேகர், தமிழகத்தில் ஊடங்கள் தவறான தகவல்களை பரப்புவதாக குற்றம்சாட்டினார். வட மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிட்ட இளைஞர்கள் கொல்ப்பட்டனர் என்பது ஒரு பொய்யான செய்தி என குறிப்பிட்டார்.

இதே போல் சிறுமி ஒருவர் இந்து கோவிலுக்குள் வைத்து கற்பழித்து கொல்லப்பட்டார் என்ற செய்தியும் பொய்யானது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சில சாதாரண விஷயங்களை  ஊடங்கள் பெரிதாக்கிவிட்டு பின்னர் அவற்றை அம்போ என்று விட்டு விடுகின்றனர்.

இந்த பத்திரிக்கைகளின் நோக்கமே வதந்தியைப் பரப்புவது தான் என்றும் இதற்கெல்லாம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூடிய சீக்கிரம் ஆப்பு வைப்பார் என்றும் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

கருத்து சுதந்திரம் என்பது  தன்னுடைய பாக்கெட்டில் இருந்து  பணத்தை எடுத்து செலவி செய்ய வேண்டும்,, அடுத்தவர்கள் பாக்கெட்டுக்குள் கையை விடுவது கருத்து சுதந்திரம் ஆகாது என அதிரடியாக தெரிவித்தார்.