பிங்க் ரீமேக்கை தொடர்ந்து ‘தல 60’ படம் மங்காத்தா -2 படத்தில் அஜித் நடிக்க உள்ளதாகவும் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாதகவும் தகவல்கள் கூறப்பட்ட நிலையில் அஜித் தரப்பில் இருந்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. 

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அஜித்தின் மவுசு இன்னும் உச்சம் தொட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து சதுரங்கவேட்டை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் பிங்க் ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்தப்படத்தில் பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடித்து வருகிறார்.

இந்தப்படத்தை அடுத்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அஜித் 60வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவின. அதனை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சியில், அஜித்துடன் மீண்டும் ஒரு படம் பண்ணுவேன் என உறுதியாகத் தெரிவித்தார் வெங்கட் பிரபு.

 

இந்தப்படம் மங்காத்தா 2ம்ன் பாகமாக இருக்கலாம் எனக்கூறப்பட்டது. அஜித் தரப்பிடம் இருந்து மங்காத்தா 2 படத்தில் அஜித் நடிக்கும் தகவல் உண்மையில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.