Rs 3 lakh for 1 hour! TV actress Jaya lakshmi whats app call
நடிகை ஜெயலட்சுமியை விபசாரத்தில் ஈடுபடும்படி தொடர்ச்சியாக தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர், பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தின் மூலமாக, தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதைத்தொடர்ந்து, கோரிப்பாளையம், விசாரணை, அப்பா, மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக, குற்றம் 23 உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். தற்சமயம், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழ்க் கடவுள் முருகன், கேளடி கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.
.
இவருக்கு சமீபத்தில் வாட்சாப் மூலமாக, ஒருவர் பாலியல் சீண்டல் தரும் வகையில் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதைபற்றி ஜெயலட்சுமி பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த நபர் தான் ஒரு விபசார புரோக்கர் என்றும், தன்னை புரோக்கராக வைத்து விபசாரத்தில் ஈடுபட்டால் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.3லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்றும் கூறி ஜெயலட்சுமிக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி அந்த நபரை வாட்சாப்பில் இருந்து பிளாக் செய்துவிட்டார். எனினும் , வேறு ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து மீண்டும் இத்தகைய குறுஞ்செய்தி அவருக்கு அனுப்பப்பட்டுளளது. ஜெயலட்சுமியை போல அவரது தோழிகள் சிலருக்கும் அந்த நபர் விபசார அழைப்பு விடுத்துள்ளார். இதன்பேரில் ஜெயலட்சுமி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். இதுபற்றி தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர்
.
இதற்கு நன்றி தெரிவித்து ஜெயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘’என் புகாரை ஏற்று விபசார அழைப்பு விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்காக சென்னை போலீசாருக்கு நன்றி. நடிகைகளாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். நாங்களும் சராசரி மனிதர்கள்தான். விபசாரம் செய்வதற்காக நாங்கள் நடிக்க வரவில்லை. நடிப்பு ஒரு தொழில். இதனை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நடிகைகளை பார்த்து யாரும் தப்பாக நினைத்துக் கொள்ள கூடாது என்பதற்காகவே இந்த விசயத்தை நான் கமிஷனர் வரை கொண்டு சென்றேன். எங்களையும் சக பெண்ணாக மக்கள் மதிப்பார்கள் என நம்புகிறேன்,’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
