RRRTrailer : இன்று வெளியாகவுள்ளRRR ட்ரெய்லர் திரையரங்குகள்  மற்றும் யூட்யூப்பில் வெளியாகும் நேரம் குறித்து படக்குழு மாஸ் அப்டேட் கொடுத்துள்ளது.

பாகுபலி இரண்டு பக்கங்களின் மாஸ் வெற்றிக்கு பிறகு ரசிகர்களுக்கு அடுத்த மாஸ் விருந்தா இயக்குனர் ராஜமௌலி rrr படத்தை பிரமாண்ட செலவில் உருவாக்கி வருகிறார். ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR), ஆலியா பட் (Alia Bhatt), சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் (RRR) திரைப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில். விறுவிறுப்பாக உருவாகி வரும், இந்த படம் வரும் ஜனவரியில் திரையிட தயாராகி வருகிறது.

ஏற்கனவே இந்த படத்திலிருந்து மோஷன் போஸ்டர், முதல் சிங்கிளாக "நட்பு" பாடல். இரண்டாம் சிங்கிளாக "நாட்டுக்கூத்து" பாடல் வெளியாகியுள்ளது. இதில் சமீபத்தில் வெளியான நாட்டு கூத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆர் இவர்களின் மின்னல் வேக நடனம் ரசிகர்களை கண்கொட்டாமல் பார்க்க வைக்கும் விதத்தில் அமைத்துள்ளது. தவிர அனைத்து மொழியிலும் இந்த பாடல் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. ஜனவரி மாதம் 7 ஆம் தேதி ஆர்.ஆர்.ஆர் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த டிசம்பர் 3-ம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர். பின்னர தொழில் நுட்ப கோளாறு காரணமாக மூவியின் ட்ரெயிலர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. டிசம்பர் 3 க்கு பதிலாக டிசம்பர் 9 ஆம் தேதி ட்ரெயிலர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

இது குறித்து படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் இருவரும் தங்களது மாஸ் புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் இன்று வெளியாகவுள்ள சுமார் 3: 07 நிமிடங்கள் கொண்ட RRR ட்ரெய்லர் திரையரங்குகளில் காலை 10 மணிக்கும், யூட்யூப்பில் மலாய் மணிக்கும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்படுள்ளது.