Asianet News TamilAsianet News Tamil

RRRTrailer : வேற லெவல் பிஜிஎம் உடன் வெளியான RRR ட்ரெய்லர் !!

RRR Trailer : சிறையிலிருக்கும் ஏழை சிறுமிக்காக அதிகாரவர்க்கத்தை தொம்சம் செய்யும் நாயகர்களை கொண்ட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

RRR Trailer release
Author
Chennai, First Published Dec 9, 2021, 12:13 PM IST

பாகுபலி இரண்டு பக்கங்களின் மாஸ் வெற்றிக்கு பிறகு ரசிகர்களுக்கு அடுத்த மாஸ் விருந்தா இயக்குனர் ராஜமௌலி rrr படத்தை பிரமாண்ட செலவில் உருவாக்கி வருகிறார். ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR), ஆலியா பட் (Alia Bhatt), சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள  ஆர்.ஆர்.ஆர் (RRR) திரைப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி  உருவாக்கப்பட்டு உள்ளது. 

இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில். விறுவிறுப்பாக உருவாகி வரும், இந்த படம் வரும் ஜனவரியில் திரையிட தயாராகி வருகிறது.

ஏற்கனவே இந்த படத்திலிருந்து மோஷன் போஸ்டர், முதல் சிங்கிளாக "நட்பு" பாடல். இரண்டாம்  சிங்கிளாக "நாட்டுக்கூத்து" பாடல் வெளியாகியுள்ளது. இதில் சமீபத்தில் வெளியான நாட்டு கூத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆர் இவர்களின் மின்னல் வேக நடனம் ரசிகர்களை கண்கொட்டாமல் பார்க்க வைக்கும் விதத்தில் அமைத்துள்ளது. தவிர அனைத்து மொழியிலும் இந்த பாடல் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. ஜனவரி மாதம் 7 ஆம் தேதி ஆர்.ஆர்.ஆர் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

RRR Trailer release

இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த டிசம்பர் 3-ம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர். பின்னர தொழில் நுட்ப கோளாறு காரணமாக மூவியின் ட்ரெயிலர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. டிசம்பர் 3 க்கு பதிலாக டிசம்பர் 9 ஆம் தேதி ட்ரெயிலர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

அதன்படி இன்று RRR படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. 3: 07 நிமிட நீளம் கொண்ட அந்த வீடியோவில் ராம் சரண்- ஜூனியர் என்டிஆரின் அதிரடி காட்சிகள் இடம்பிடித்துள்ளது. மலை கிராம மக்களில் ஒரு சிறுமியை போய் வழக்கு மூலம் சிறையிலடைத்து சித்ரவதை செய்யும் அதிரகார வர்க்கத்திற்கு எதிராக போராடும் இரு இளஞர்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios