RRR Trailer Date : இயக்குனர் ராஜமௌலி வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில் வரும் டிசம்பர் 9-ம் தேதி இதன் ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு “பாகுபலி” இயக்குநர் ராஜமெளலி “ஆர்ஆர்ஆர்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உடன் அஜய் தேவ்கன், இவர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில். விறுவிறுப்பாக உருவாகி வரும், இந்த படம் வரும் ஜனவரியில் திரையிட தயாராகி வருகிறது.

ஏற்கனவே இந்த படத்திலிருந்து மோஷன் போஸ்டர், முதல் சிங்கிளாக "நட்பு" பாடல். இரண்டாம் சிங்கிளாக "நாட்டுக்கூத்து" பாடல் வெளியாகியுள்ளது. இதில் சமீபத்தில் வெளியான நாட்டு கூத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆர் இவர்களின் மின்னல் வேக நடனம் ரசிகர்களை கண்கொட்டாமல் பார்க்க வைக்கும் விதத்தில் அமைத்துள்ளது. தவிர அனைத்து மொழியிலும் இந்த பாடல் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.

 ஜனவரி மாதம் 7 ஆம் தேதி இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளும் இப்போதே துவங்கி விட்டது. ஏற்கனவே இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி பிரம்மிப்பை ஏற்படுத்தியது. இதன் டீசர் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அனால் திட்டமிட்டபடி ட்ரைலர் வெளியவில்லை.

இந்நிலையில், தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ராஜமௌலி வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில் வரும் டிசம்பர் 9-ம் தேதி இதன் ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Scroll to load tweet…