'RRR ' திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகார பூர்வமாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

'RRR ' திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகார பூர்வமாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு “RRR ” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் ஹீரோவாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், பாலிவுட் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். சுமார் 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில், விறுவிறுப்பாக இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர், மேக்கிங் வீடியோ, மற்றும் நட்பு பாடல் என அனைத்திற்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்தமாதம் படமும் ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்திருந்தனர். ஆனால் 'RRR 'படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து RRR படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அக்டோபர் 21 -க்குள் RRR படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிடும். ஆனால், நாங்கள் பட வெளியீட்டை ஒத்திவைக்கிறோம். தியேட்டர்கள் அனைத்தும் முழுமையான இறக்கைகளுடன் செயல்பட துவங்கிய பின்னர் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ளதால், பாகுபலி படத்திற்கு கிடைத்த வரவேற்பு போல் இந்த படத்திற்கும் கிடைத்தால் தான் வசூல் சாதனையில் இந்த படம் இணையும் என்று படக்குழு இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Scroll to load tweet…