Asianet News TamilAsianet News Tamil

RRR day1 collection: புதிய சாதனை படைத்த ராஜமவுலியின் ''ஆர்.ஆர்.ஆர்'' திரைப்படம்....ஒரே நாளில் 250 கோடி வசூல்!

RRR box office collection day 1: ராஜமௌலியின் ''ஆர் ஆர் ஆர்'' திரைப்படம் நேற்று ஒரே நாளில் ரூ 250 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

RRR box office collection day 1
Author
Chennai, First Published Mar 26, 2022, 10:48 AM IST

ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படம் நேற்று ஒரே நாளில் ரூ 250 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாகுபலி உள்ளிட்ட வெற்றி படங்களை இயங்கிய தெலுங்கு சினிமாவின் வெற்றி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் தயாரான பிரம்மாண்ட படைப்பு ஆர் ஆர் ஆர் திரைப்படம்.

RRR box office collection day 1

ராஜமௌலியின் புதிய படைப்பு:

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.மேலும், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி என  பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் ரிலீஸ்:

RRR box office collection day 1

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம், கடந்த ஜனவரி மாதமே வெளியாகி இருக்க வேண்டியது. அதற்காக படக்குழு பெரிய அளவில் புரொமோஷன் எல்லாம் செய்தார்கள்.

ஆனால் கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் அப்படியே தள்ளிப்போனது. இதையடுத்து, படம் மார்ச் 25ம் தேதி நேற்று திரையரங்கில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில், ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. 

RRR box office collection day 1

ராஜமௌலியின்  500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்ட ஆர்.ஆர்.ஆர் படத்தின், வசூல் விவரம் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது. தற்போது அந்த வரிசையில் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

RRR box office collection day 1

முதல் நாள் வசூலில் சாதனை படைத்த ஆர்.ஆர்.ஆர் படம்:

படத்தின் வசூல் எல்லாம் இடங்களிலும் பெரிய அளவில் உள்ளது. அதன்படி,   முதல் நாள் மட்டுமே RRR படம்  ரூ 248 கோடி வசூல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ 120 கோடி, இந்தியில் படம் ரூ 25 கோடி, கர்நாடகாவில் ரூ 14 கோடி, கேரளாவில் 4 கோடி, தமிழகத்தில் படம் ரூ. 12 கோடி வெளிநாடுகளில் 75 கோடி வசூலித்துள்ளது. மொத்தம் ரூ 248 கோடி வசூல் செய்து முந்தைய சாதனையை படம் முறியடித்துள்ளது.

மேலும் படிக்க...RRR Australia box office: மாஸ்டர் வசூலை ஓரம் கட்டிய ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படம்..வசூல் விவரம் தெரியுமா..?

Follow Us:
Download App:
  • android
  • ios