தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2 படம் கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. அதே போல் இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்களும் செம ஹிட்டாகியது.

மேலும்  இந்தப் படத்தில் இடம் பெற்ற  ரவுடி பேபி  பாடல்  கடந்த மாதம் 2 ஆம் தேதி யு-டியுபில் வெளியானது. தற்போது இந்தப் பாடல், ஒரு மாத காலத்திற்குள் 15 கோடி பார்வைகளைப் பெற்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

தமிழ்த் திரைப்பட வீடியோ பாடல்களில் முதல் முறையாக 15 கோடி பார்வைகளைக் கடந்த பாடல் என்ற பெருமையை இந்தப் பாடல் பெற்றுள்ளது. சாய் பல்லவி நடித்து, நடனமாடியுள்ள இரண்டாவது திரைப்படப் பாடல் 15 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. 

இதற்கு முன் சாய் பல்லவி நடித்து தெலுங்கில் வெளிவந்த ‘பிடா’ படத்தின் ‘வச்சிந்தே’ பாடல் 18 கோடி பார்வைகளைத் தற்போது கடந்துள்ளது. ‘ரவுடி பேபி’ பாடலுக்குப் பிறகு இந்த தெலுங்குப் பாடலைப் பற்றிக் கேள்விப்படும் பலரும், அந்தப் பாடலையும் பார்த்து பார்வை எண்ணிக்கையை உயர்த்தி வருகிறார்கள். ஆனாலும், ‘வச்சிந்தே’ பாடலுக்கு 4 லட்சம் லைக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. 

ரவுடி பேபி பாடலின் லைக், ‘ஒய் திஸ் கொலவெறி லைக்கான 12 லட்சத்தை கடந்து 13 லட்சத்தை பெற்று அதிலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளது. இதையடுத்து யுவன் ஷங்கர் ராஜாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.