Rohini theater started in the second branch of the tour What is the first film to be screened?
ஆவடியில் தனது இரண்டாவது கிளையை தொடங்கியது ரோகினி திரையரங்கம். முதல் படமே சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் தான்.
ஹீரோக்கள் தொடர்ந்து படங்களில் நடிப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால், அவர்களது படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது தான் குதிரைக் கொம்பாக உள்ளது.
அந்த வகையில், வரும் 22-ஆம் தேதி மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள வேலைக்காரன் படம் வெளியாகவுள்ளது.இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இதனையொட்டி, கோயம்பேட்டில் சிறந்து விளங்கும் ரோகினி திரையரங்கம் ஆவடியின் அதன் புது கிளையைத் திறந்துள்ளது.
ஆறு திரைகளை கொண்ட ரோகினி ஆவடியில் ரெமி சினிமாவை வாங்கியுள்ளது. அதற்கு ரோகினி என்று பெயரிட்டு சென்னையில் தனது 2-வது கிளையை திறந்துள்ளோம் என்று தங்களது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்தத் திரையரங்கில் வெளியிடப்படும் முதல் படம் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் தான். சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகரானா ரோகினி திரையரங்கம் தனது இரண்டாவது கிளையை தொடங்கியதில் பெரு மகிழ்ச்சி அடைகிறது என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளது.
