ரன்பீர் கபூரின் ராக்ஸ்டார் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அந்த படத்தின் ரீயூனியனில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் கலந்து கொண்டுள்ளார்.

பாலிவுட் திரையுலகை கலக்கி வரும் ராக்ஸ்டார் ரன்பீர் கபூர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சாவரியா என்னும் திரைப்படத்தில் அறிமுகமான இப் ரன்பீர் கபூர் இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றுள்ளார்.

முதல் படத்திலேயே முத்திரை பதித்த ரன்பீர் கபூர் இதை தொடர்ந்து பச்னா ஏ ஹசீனோ, லக் பை சான்ஸ்,வேக் அப் சித், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் கனவுடன் திரையுலகிற்குள் நுழைந்த ரன்பீர் கபூர் பிரபல பாலிவுட் இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலியிடம் உதவியாளராகப் பணிபுரிந்துள்ளார். திரை பிரபலங்களான கரீஷ்மா கபூர், கரீனா கபூர் மற்றும் நிகில் நந்தா உள்ளிட்டோரின் உறவுக்காரரான ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த 2011-ல் வெளியான 'ராக்ஸ்டார்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்திருந்தது.

 இசை ரொமான்டிக் டிராமா திரைப்படமான இதை இம்தியாஸ் அலி இயக்கியுள்ளார். இவர் சைஃப் அலி கான்தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான லவ் அஜ் கல் , ரன்தீப், அலியாபட் நடிப்பில் வெளியான ஹைவே உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ராக்ஸ்டார் படத்தை ஸ்ரீ அஷ்டவிநாயக சினி விஷன் தயாரித்திருந்தது. 41 கோடி செலவில் உருவாக்கி இருந்த இந்த படம் 108 கோடியை ஈட்டிக்கொடுத்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தின் மகுடமாய் தேசிய விருது வென்ற ஏ.ஆர் ரகுமானின் இசையில் உருவானதுதான். இசை சார்ந்த இந்த படத்திலிருந்து வெளியான பாடல்கள் அந்நாட்களில் நல்ல வெற்றியை பெற்றிருந்தது. 

இந்நிலையில் இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ளதால் இதன் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். அதோடு இதன் ரசிகர்களுக்கும் ராக்ஸ்டார் என்னும் ஹேஸ் டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். அந்த வகையில் படத்தின் நாயகனான ரன்பீர் கபூர், இயக்குனர் இம்தியாஸ் அலி, ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்டோர் வீடியோ கால் மூலம் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளனர். இது ரன்பீர் கபூர் இன்ஸ்டா பக்கத்தில் ஸ்கிரீன் ஷார்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

View post on Instagram