ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படம் கடைசி ஷெட்யூலை திட்டமிட்டுவிட்டது! என தகவல். மும்பை ஷெட்யூல்கள் முடிந்து, இறுதி கட்ட ஷெட்யூல் லண்டனில் நடக்கிறதாம். அநேகமாக அங்கே ஒரு பாடல் காட்சி மற்றும் க்ளைமேக்ஸ் சேஸிங் எடுக்கப்பட இருக்கிறது! என்கிறார்கள். 

தேசத்துக்கு எதிரான பயங்கரவாதங்களை ஸ்டைலிஷான திரைக்கதை அமைப்புடன் படமாக்குவதில் கில்லியான இயக்குநர்தான் ஏ.ஆர்.எம். ஏற்கனவே கத்தியில், இந்திய ராணுவத்தின் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரியாக விஜய்யை காண்பித்திருப்பார். 

விஜய்யின் ரியல் சுபாவத்துக்கு ஏற்றது போல் ஆர்பாட்டங்கள் இல்லாமல், அண்டர்பிளே செய்து அசத்தும் அநாயச கேரக்டர் அது. தெறிக்க விட்டிருப்பார் விஜய். இப்போது ரஜினியை வைத்து முருகதாஸ் இயக்கிக் கொண்டிருக்கும் ‘தர்பார்’ படமும் இப்படித்தான் மும்பை சிட்டி உள்ளிட்ட பகுதிகளின் பாதுகாப்பு பிரச்னைகளும், அதை போலீஸ் அதிகாரி ரஜினி சமாளித்து ஒடுக்குவதுதான் கதையோட்டத்தின் முக்கிய அம்சங்களாம். கூடவே சர்வதேச தீவிரவாதம் பற்றியும் படம் பேசுகிறது என்கிறார்கள். 

அந்த வகையில், இந்தப் படத்தின் மும்பை ஷெட்யூல்கள் முடிந்துவிட்டனவாம். அடுத்து லண்டனுக்கு பறக்கிறது ‘தர்பார்’ க்ரூ என்கிறார்கள். அங்கே ரஜினியுடன், நயனுக்கு ஒரு பாடல் சீக்வென்ஸை எடுக்கிறார்கள்.  அதன் பின் இந்தியாவிலிருந்து தப்பிய ஒரு சர்வதேச பயங்கரவாதியை இங்கிலாந்து காவல்துறையின் உதவியுடன் ரஜினி சேஸ் செய்து மடக்கும் காட்சிகள் ஷூட்டாக இருக்கின்றன என்று தகவல். 

நாடு தாண்டி தலைவன் ஆடும் தடாலடி தாண்டவத்தை காண காத்துக்கிடக்குது ரசிக கூட்டம். 
நீ ஆடு தலைவா!