roboshanker shociking video release

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் ரோபோ ஷங்கர். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் போட்டியாளராக அறிமுகமான இவர் தற்போது முன்னணி நடிகர்கள் படங்களில் கலக்கி வருகிறார். 

விசுவாசம்:

இவர் அடுத்ததாக தல அஜித்தை வைத்து சிவா இயக்கும் விசுவாசம் படத்தில் அஜித்துடன் கூடவே இருக்கும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் இதற்காக 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தொகுப்பாளர்:

ஒரு பக்கம் நடிப்பில் கலக்கி வரும் இவர் மற்றொரு புறமோ விருது வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட சிறப்பு நிகழ்சிகளை காமெடியாக தொகுத்து வழங்கி வருகிறார். 

பணிப்பெண்னிடம் அத்து மீறல்:

இந்நிலையில் இவர் விமானத்தில் பணிப்பெண்னிடம் அத்துமீறி நடந்துக்கொண்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் 'நான்கு பேர் இருக்கிறோம் சாப்பாடு வேண்டும் என சற்று குடித்துவிட்டு தள்ளாடுவது போல் கேட்கிறார்' அதற்கு அந்த விமான பணி பெண்ணும் பதில் கூறுகிறார். உடனே ஐ லவ் யு என்று கூறி அந்த விமான பணி பெண் கையில் முத்தம் கொடுக்கிறார் ரோபோ ஷங்கர்.

இவரின் செயல் பார்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும் இவர் பேசும் விதத்தை வைத்து பார்கையில் இது பட ஷூட்டிங்கில் எடுக்காப்பட்டதா என்றும் யோசிக்க வைக்கிறது.