மக்கள் மனதில் சிறந்த நடிகையாக நிலைத்து நிற்க, வாய்ப்பிற்காக தேடி தேடி அலைய வேண்டியது இல்லை. கிடைத்த வாய்ப்பை கில்லியாக பயன் படுத்திக்கொண்டாலே போதும் என நிரூபித்தவர் பிரபல நடிகர் ரோபோ ஷங்கரின் மகள், இந்திரஜா.

அப்பா - அம்மா இருவருவே காமெடி ரியாலிட்டி ஷோக்களின் மிகுந்த ஆர்வமாக இருக்கும் போது.. மகளுக்கும் அதனை சொல்லி தர வேண்டுமா என்ன? அவ்வப்போது தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து டிக் டாக் வீடியோவை வெளியிட்டு வந்தார் இந்திரஜா.

எதிர்பாராத விதமாக இந்த வீடியோக்கள்,  இயக்குனர் அட்லீ கண்ணில் பட, அவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து கடந்த வருடம் வெளியான 'பிகில்' படத்தில், புட் பால் டீமில் நடித்த நடிகைகளில் ஒருவராக நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

சிறிய பாத்திரம் என்றாலும், இந்திராஜாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும், அவ்வப்போது, வித விதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், தற்போது ப்பா... என்று சொல்லும் அளவிற்கு மேக் அப் போட்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ...