rk suresh got thelugu block burster nepoliyan movie

தெலுங்கில் இந்த வருடம் ஆக்சன் மற்றும் திரில்லர் பாணியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'நெப்போலியன்'. இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை ஸ்டுடியோ 9 சார்பில் ஆர்.கே.சுரேஷ் வாங்கியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஏற்கெனவே ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரித்து வெளியான வெற்றிப் படமான 'தர்ம துரை'க்குப் பிறகு வித்தியாசமான நல்லதொரு கதைக்குக் காத்திருந்த சமுத்திரக்கனி மற்றும் ஆர்.கே. சுரேஷுக்கு நெப்போலியன் படத்தின் கதை மிகவும் பிடித்துப் போகவே ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார்.

இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்க உள்ளார். மேலும் யாருமே எதிர்பார்த்திராத முக்கியமான நடிகர்களும் நடிக்கவுள்ளனர். இந்தியிலிருந்து பெரிய நட்சத்திர நடிகர் ஒருவரும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 

மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள'நெப்போலியன் 'படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.