இயக்குனர் பாலா, இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் 'நாச்சியார்'. இந்த படத்தில், நடிகை ஜோதிகா அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். முக்கிய கதாப்பாத்திரத்தில், ஜிவி.பிரகாஷ் மற்றும் இவனா நடித்திருந்தனர்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, நடிகர் விக்ரம் மகன் துருவை வைத்து, 'வர்மா' என்கிற படத்தை இயக்கினார். 

ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை என்பதற்காக, புதிய இயக்குனரை வைத்து, மீண்டும் இந்த படத்தை ரீ-ஷூட் செய்ய உள்ளதாக அறிவித்தது, இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான E4 
என்டர்டெயன்மெண்ட் நிறுவனம். 

எனவே 'ஆதித்ய வர்மா' என்கிற பெயரில் மீண்டும் இப்படம் இயக்கப்பட்டு வெளியாகி, ஓரளவு வெற்றிபெற்றது.

இந்நிலையில் தற்போது அடுத்த பட வேலையில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் பாலா. இந்த படத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான, ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்க உள்ள படத்தை பாலா இயக்க உள்ளதாக கூறப்பட்டது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆர்.கே.சுரேஷ் , இந்த படத்திற்காக தன்னுடைய உடல் எடையை  73 கிலோவில் இருந்து,  95 கிலோவாக உயர்த்தியுள்ள புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.

மேலும் இந்த மாற்றம், பாலா சார் படத்திற்காக என்று பதிவு செய்துள்ளார். இவரின் இந்த ட்விட் தற்போது வைரலாகி வருகிறது. ஆர்.கே.சுரேஷ், இயக்குனர் பாலா இயக்கத்தில், சசி குமார் நாயகனாக நடித்திருந்த தாரைதப்பட்டை படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.