விஜய் சேதுபதி இன்று பலரும் விரும்பும் நடிகராக மாறிவிட்டார். அதற்கு காரணம் அவரது எதார்த்தமான நடிப்பும் அவரது அன்பான சுபாவமும் தான்.

இந்நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில்வெளியான படங்கள் அனைத்தும் நல்ல விமர்சனங்களை பெற்றது.

மேலும் இந்தவருடம் மட்டும் இவருக்கு இதுவரை ஆறு படங்கள் வெளிவந்துவிட்டது. ஒரு படத்தில் நடிக்கும் முன்பே அடுத்த படத்தை புக் செய்து விடுவார்.

இதில் ஆண்டவன் கட்டளைக்கு முன்பு வெளியான தர்மதுரை படம் நல்ல ஹிட்டானது. அதிலும் பாடல்கள் மக்களை மிகவும் கவர்ந்தது.

தற்போது இந்த படத்திற்காக ப்ரோமோஷனில் ஈடுபட்டு வீடியோகளை பதிவேற்றம் செய்து பலரையும் பார்க்கவைத்து சிறப்பாக செய்த ஆர்வலர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தர்மதுரை 75 வது நாள் கொண்டாட்டத்தில் பரிசுகள் கொடுத்து கவுரவிக்க போகிறாராம் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்.