rk suresh acting in ajith fan role

ஜே .கே.பிலிம் புரொடக்‌ஷன் சார்பில் கே.சி.பிரபாத் தயாரிப்பில் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் "பில்லா பாண்டி". இந்தப் படத்தில், இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த, தார தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமான தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தீவிர அஜித் ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்தில் மேயாதமான் படத்தில், வைபவ்விற்கு தங்கையாக நடித்து அனைவருடைய பாராட்டுகளையும் பெற்ற இந்துஜா கதாநாயகியாகவும், மற்றொரு நாயகியாக சாந்தினியும் நடித்துள்ளார்.

மேலும் தயாரிப்பாளர் கே.சி.பிரபாத் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து,அமுதவாணன், சங்கிலி முருகன், உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

"பில்லா பாண்டி" திரைப்படம் முழுக்க முழுக்க தல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதமாக தயாராகி வருகிறது. அஜித் ரசிகராக வரும் ஆர்.கே.சுரேஷ் சாதீய வெறியை கடுமையாக எதிர்க்கும் விதமான காட்சிகளில் நடித்துள்ளார். காமெடி நடிகர் சூரி மற்றும் நடிகர் விதார்த் ஆகியோர் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.