தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் ஒவ்வொரு நாளும், அவருடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட, மற்றும் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் பற்றிய தகவலை வெளியிட்டு வருகிறார்.

தற்போது வரை 5 பிரபலங்கள் பெயரை அவர் வெளியிட்டுள்ள போதிலும், இதுவரை யாரும் இவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும் நாளுக்கு நாள் இவர் வெளியிடும் பிரபலங்கள் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது.

இதனை கட்டுப்படுத்த சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரையுலகினர் கூறினாலும், இந்த லிஸ்டில் இடம்பிடித்த நடிகர்கள் மற்றும் இயக்குனர் மௌனம் சாதித்து வருவதால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் உள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து, முதல் முறையாக வாய் திறந்துள்ள இயக்குனரும், பெப்சி அமைப்பின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி. ‘ஸ்ரீரெட்டி விவகாரத்தில், சிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த சினிமா துறையையே களங்கப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறியுள்ளார்.