rj balaji sacrifaise the cricket

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் ஆர்.ஜே பாலாஜி, எப்போதுமே தமிழகத்தில் நல்ல கருத்துக்களை முன் வைத்து நடத்தப்படும் போராட்டத்திற்கு குரல் கொடுப்பவர். 

அந்த வகையில் தற்போது விவசாயத்திற்கும், விவசாயிகளுக்காக நடத்தப்படும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரும் போராட்டத்திற்கும் தன்னுடைய ஆதரவை கொடுத்துள்ளார். அதன்படி இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கிரிகெட் போட்டியை பார்க்காமல் தவிர்த்துள்ளார். 

மேலும் இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்... அதில் பாலாஜி, 234 எம்எல்ஏக்கள், 40 எம்பிக்கள் ஓட்டுபோட்டு அனுப்பியிருக்கிறோம். அனைவரும் ராஜினாமா செய்தால் மொத்த நாட்டின் கவனமும் கிடைக்கும் என யோசனை கூறியுள்ளார்.

மேலும் இன்று நடைபெறும் சென்னை கொல்கத்தா கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கயிருந்தாராம். ஆனால் தமிழர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக அதை புறக்கணித்துள்ளாராம்.

மேலும் இதுபற்றி தகவலை நிர்வாகத்திடம் தெரிவித்த போது அவர்களும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்கள் என கூறியுள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஒரு வேலை இந்த கிரிகெட் மேட்ச்சை இவர் தொகுத்து வழங்கி இருந்தால் பல லட்சம் சம்பளமாக பெற்றிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Scroll to load tweet…