தற்போதைய அரசியல் பற்றி எடுத்துக்கூறும் வகையில் மிகவும் காமெடியாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் எல்.கே.ஜி.  இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தேர்தல் தேதி என கூறி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி.

காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி, கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'எல்.கே.ஜி'. ஏற்கனவே படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷான் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. 

மேலும் சமீபத்தில் இந்த படத்தின், ட்ரைலர்... நடிகர் சங்கம் நடத்திய 'இளையராஜா 75 ' நிகழ்ச்சியின் மேடையில் வெளியிடப்பட்டது.  ட்ரைலர் வெளியான சில மணிநேரங்களில் வைரலாக பரவியதோடு, பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்தது.

இந்நிலையில், இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடைபெற்று  வந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளனர் படக்குழுவினர். 

 

அதாவது,  பிப்ரவரி 22 ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாக  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி  சமூக வலைத்தள பக்கத்தில் 'அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே, தேர்தல் தேதி அறிவிப்பு....! என கூறி இவரும், நடிகை பிரியா ஆனந்தும் சிறைக்கு உள்ளே இருப்பது போல் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.