RJ Balaji is now drunk at the wedding.
சல்லிக்கட்டு போராட்டத்தின்போது தான் வெளியிட்ட வீடியோவில் போராட்டம் முடிந்துவிட்டது என உறுதியாக சொல்லாததுதான் அப்போது நான் செய்த ஒரே தவறு என RJ பாலாஜி தெரிவித்துள்ளார்.
சல்லிக்கட்டுக்கான சட்டத்தை அரசு நிறைவேற்றிய பிறகு போராட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என “இட்ஸ் ஒவர் எல்லாரும் வீட்டுக்கு போங்க” என்று கொஞ்சம் அதட்டியே வேண்டுகோள் விடுத்தார்.
இதுபற்றி தற்போது ஒரு பேட்டியில் RJ பாலாஜி பேசியது:
“பல அதிகாரிகள், அரசியல்வாதிகள் தனக்கு போன் செய்து பேசியதாகவும், அவர்களுக்கு பயந்து அப்படி ஒரு வீடியோ பதிவிடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
"முதலமைச்சர் உறுதியளித்தபிறகு, போராட்டம் நடத்தியதற்கான முக்கிய காரணம் நிறைவேறிவிட்டதாக எனக்கு தோன்றியது. அதனால் தான் 'போராட்டம் முடிந்துவிட்டது என நான் நினைக்கிறேன், நீங்களும் நினைத்தால் வீட்டிற்கு செல்லுங்கள்' என அந்த வீடியோவில் கூறினேன்.
பின்னர் இந்த போராட்டம் தொடர்ந்து நடந்தது. கலவரத்துடன் முடிந்தது.
அந்த வீடியோவில் போராட்டம் முடிந்துவிட்டது என உறுதியாக சொல்லாததுதான் அப்போது நான் செய்த ஒரே தவறு" என RJ பாலாஜி தெரிவித்துள்ளார்.
