ஒரு தொகுப்பாளராக, சின்னத்திரையில் தன்னுடைய திரை பயணத்தை துவங்கி இன்று, வெள்ளித்திரை நாயகனாக மாறி இருப்பவர் ரியோ ராஜ். இவர் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து தற்போது, அதர்வாவை திரையுலகில் ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் அறிமுகம் செய்த, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவருடைய மனைவி ஸ்ருதி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதைமுன்னிட்டு ஸ்ருதிக்கு வளையக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரியோவுடன் நடித்த பிரபலங்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அந்த வகையில், ரியோ சற்றும் எதிர்பாராத பிரபலம் வீட்டிற்கு விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, ரியோவை வைத்து 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' படத்தை தயாரித்தவரும், நடிகருமான சிவகார்த்திகேயன் தான். 

அவரை ஆனந்த இன்முகத்தோடு, ரியோ வரவழைத்தார். சிவகார்த்திகேயனும் ஸ்ருதிக்கு வளையல் அணிவித்து, வாழ்த்தி சென்றுள்ளார். தற்போது சிவாவுடன் ரியோ எடுத்துக்கொண்ட செல்பி வைரலாகி வருகிறது.