நடிகர் சிவகார்த்திகேயன் 'கனா' படத்தை தொடர்ந்து, இரண்டாவதாக தயாரிக்கும் படத்தில், பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, சீரியல், நிகழ்ச்சி தொகுப்பாளர் என படிப்படியாக தன்னுடைய திறமையால் முன்னேறிய ரியோராஜ் கதாநாயகனான நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில்,  தற்போது தொழில்நுட்ப பணிகள், மற்றும் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' என்ற பெயரை தலைப்பாக படக்குழு தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. 

எம்.ஜிஆர் நடித்த 'என் அண்ணன்' படத்தில் இடம்பெற்ற பாடல் வரியே இந்த டைட்டில் என்பதும், இதே டைட்டிலில் ராமராஜன் நடித்த படம் ஒன்று வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரியோ ராஜ், ஷ்ரின், ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் வேணுகோபால் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது