பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நாள் என்று கூறலாம். ஆம் இன்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதியை எட்டி உள்ளது. பலரும் பிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். 

நேற்றைய தினம், இறுதி சுற்றில் நான்கு போட்டியாளர்கள் இருந்த நிலையில், ஜனனி வெளியேற்றப்பட்டதால் அது மூன்றாக குறைந்தது. தற்போது நடிகை விஜி, ஐஸ்வர்யா, மற்றும் ரித்விகா ஆகியோர் உள்ளனர். ஐஸ்வர்யா சில டாஸ்குகள், மற்றும் சில விஷயங்களில் அதிருப்தியை பெற்றதால் அவர் வெற்றியாளராக வர வாய்ப்பு இல்லை என கூறப்பட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்களோ தொடர்ந்து அவரை காப்பாற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் சிலர் ஐஸ்வர்யா வெற்றியாளராக வர வாய்ப்பு உள்ளது என கூறி வருகிறார்கள்.

அதே போல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் உள்ளே வந்த முதல் நாள் முதல், 100 நாட்களை எட்டிய வரை நடுநிலையாக விளையாடி வரும் ரித்விகாவிற்கு மக்களின் ஆதரவு அதிகமாகவே உள்ளது. இதனால் இவர் தான் வெற்றியாளர் என பலர் கூறி வருகின்றனர். உண்மையில் இன்று பிக்பாஸ் மேடையில் என்ன நடக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட ஒரு டீசரில் நடிகர் ஆரவ் பிக்பாஸ் வீட்டின் உள்ளே வந்து ரித்விகாவை வெளியேற்றுவது போல காட்டப்பட்டது இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது. ஆனால் அவர் உண்மையில் விஜயலட்சுமியை தான் அழைத்து சென்றாராம்.

இறுதியில் ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் கடைசி இரண்டு போட்டியாளர்களாக இருப்பார்கள் தான் உள்ளே உள்ளனர் என்று தற்போது நிகழ்ச்சியின் மூலம் தெளிவாகியுள்ளது.