இயக்குனர், பாலா இயக்கிய 'பரதேசி' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா, ஆனால் இவரை சிறந்த துணை நடிகையாக ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது 2014 ஆண்டு கார்த்தி, நடிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'மெட்ராஸ்' திரைப்படம் தான். இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றார்.

மேலும் 'ஒரு நாள் கூத்து', படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.  சூப்பர் ஸ்டார் நடித்த 'கபாலி'  படங்களிலும் நடித்து பிரபலமானார்.

அதே போல் கடந்த வருடம், உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்களின் ஆதரவை பெற்று டைட்டில் வென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெற்ற பின் பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் ரித்விகாவுக்கு  விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது,  என்கிற தகவலை ஒரு படவிழாவில் அவரே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் "நான் யாரோ ஒருவரை காதலித்து வருவதாகவும்,  இந்த வருடம் அவருக்கும் எனக்கும்,  திருமணம் நடக்கும் என்று சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் பரவி இருக்கிறது"

ஆனால் நான் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. என் திருமணம் 2020 - ல் நடைபெறும் அதற்குள் நான் நடிக்க வேண்டிய படங்களில் நடித்து முடித்து விடுவேன்.  ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பேன்.  புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை.  திருமணத்திற்கு பின் நடிப்பதா வேண்டாமா என்பதை என் கணவர் முடிவு செய்வார் என அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார் ரித்விகா. இவரின் முடிவை பாராட்டி பலர் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தாலும். சிலர் இவர் நடிப்புக்கு முழுக்கு போடுவது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளனர்.  மேலும் சிலர் இதுபோன்ற சிறந்த குணத்திற்காக தான் பிக்பாஸ் டைட்டில் வென்றார் ரித்விகா என கூறிவருகிறார்கள்.