நயன்தாராவை தொடர்ந்து அத்தி வரதரை தரிசனம் செய்த பிக்பாஸ் நடிகைகள்! லைக்குகளை அள்ளிய புகைப்படம்!
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்தசரஸ் குளத்தில் இருந்து, எடுக்கப்பட்டு, கடந்த 48 நாட்களாக, பெருவாரியான பக்தர்களுக்கு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அருள்பாலித்து வந்தார் அத்திவரதர்.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்தசரஸ் குளத்தில் இருந்து, எடுக்கப்பட்டு, கடந்த 48 நாட்களாக, பெருவாரியான பக்தர்களுக்கு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அருள்பாலித்து வந்தார் அத்திவரதர்.
நாளையுடன் அத்திவரதர் தரிசனம், முடிவடைய உள்ளதை ஒட்டி, அதிக அளவில், பக்தர்கள் கோவிலுக்கு படையெடுத்து வருகிறார்கள். மேலும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி, ஆதாவது நாளை மறுநாள் மீண்டும் அத்தி வரதரை மந்திரங்கள் முழங்க, குளத்தில் வைக்க உள்ளனர் அச்சகர்கள்.
இந்த நிலையில் கோலிவுட் பிரபலங்கள் தொடர்ந்து, அத்தி வரதரை தரிசனம் செய்து வருகிறார்கள். அந்த வகையில், நேற்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்துடன் வந்து ஸ்வாமி தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து இன்று, நடிகை நயன்தாரா அத்தி வரதரை தரிசிக்க வந்தார்.
இவரை தொடர்ந்து, தற்போது பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வென்ற, நடிகை ரித்விகா மற்றும் ஜனனி அய்யர் ஆகியோர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். இது குறித்த புகைப்படத்தை அவர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
.#Bigboss2tamil friends @jan_iyer and @Riythvika finish off with Athivarathar darshan. pic.twitter.com/PHDcYm6jNL
— Chennai Times (@ChennaiTimesTOI) August 14, 2019