பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்டில் ஜனனி, சென்றாயன், ஐஸ்வர்யா, மும்தாஜ் மற்றும் விஜயலஷ்மி ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். இவர்களுக்கு ஒருவரை ஒருவர் எவிக்ஷனில் இருந்து காப்பாற்றி கொள்ள, சக போட்டியாளரை கன்வின்ஸ் செய்யும் டாஸ்க் தரப்பட்டிருக்கிறது. 

இதில் ஜனனியை எவிக்ஷனில் இருந்து காப்பாற்ற பாலாஜி மொட்டை அடித்து கொண்டிருக்கிறார். அதே போல சென்றாயனை எவிக்ஷனில் இருந்து காப்பாற்ற ஐஸ்வர்யா முடி வெட்டி கொண்டார்.
 வீட்டிற்கு புதிதாக வந்திருக்கும் விஜயலஷ்மி இந்த வாரமே எவிக்ஷன் லிஸ்டுக்கு வந்திருக்கிறார். அவர் தன்னை இந்த எவிக்ஷனில் இருந்து காப்பாற்றி கொள்ள யாரவது ஒருவரை கன்வின்ஸ் செய்ய வேண்டும். கன்வின்ஸ் செய்து பிக் பாஸ் லோகோவான அந்த ஒற்றை இயந்திர கண்ணை தனது உடலில் பச்சை குத்தி கொள்ள வேண்டும் அதுவும் நிரந்தரமான டாட்டூவாக போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

மேலும் நிரந்தரமாக பச்சை குத்தி கொள்வது அவ்வளவு சாதாரணமான் விஷயம் கிடையாது. சிலருக்கு காய்ச்சல் கூட வரும். தோலின் அடியில் சாயம் செலுத்தப்படுவதால் கடுமையான வலி இருக்கும். இப்படிப்பட்ட ஒரு ரிஸ்கை விஜயலஷ்மிக்காக ரித்விகா எடுக்க வேண்டும் என்பதற்காக கன்வின்ஸ் செய்யும் போது, பிக் பாஸில் இருக்கும் ஐ என்ற எழுத்தை மட்டும் பச்சை குத்தி கொண்டால் போதும். என கூறுகிறார் விஜயலஷ்மி. ஐ என்று மட்டுமே கடைசி வரை சொல்லும் விஜயலஷ்மி, கண் என்று தெளிவாக சொல்லவில்லை. அதனை மும்தாஜ் தான் சரி செய்து கண் என்று கூறுகிறார். 

கடைசியில் ரித்விகாவும் இதற்கு சம்மதித்திருக்கிறார். ரித்விகா இவ்வளவு ரிஸ்க் எடுத்து கஷ்டப்படுவது மும்தாஜிற்கு சகித்து கொள்ள முடியவில்லை. இது வேண்டாம் என்பது போல ரித்விகா கஷ்டப்படும் போது தடுக்கிறார் மும்தாஜ். அப்போது இதனை சகித்து கொள்ள என்னால் முடிகிறதா என பார்ப்போம் என்று இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார் ரித்விகா. 

மொத்தத்தின் இன்றைய பிரமோவின் போது சென்றானுடன் போது விஜயலஷ்மியை பார்க்கையில், பக்கா வில்லி போலவே தெரிகிறார். ஒரு வேளை எடிட்டிங் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். எது எப்படியோ இந்த நிரந்தர டாட்டு கொஞ்சம் கடுமையான தண்டனை தான். பாவம் ரித்விகா என பலர் இவர் மீது பரிதாபப்பட்டு வருகிறார்கள்.