Asianet News TamilAsianet News Tamil

Rise Of SK.. பிரேம்ஜி வெளியிட்ட SK மோஷன் போஸ்டர்.. முன்கூட்டியே ரிலீசான பிறந்த நாள் பரிசு..

நாளை சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று Rise Of SK.. என்னும் பெயரில் அவர் குறித்த மோஷன் போஸ்டரை பிரேம்ஜி வெளியிட்டுள்ளார்..

Rise Of SK Official Motion Poster
Author
Chennai, First Published Feb 16, 2022, 9:56 PM IST

சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக தொடங்கி, பின்னர் தொகுப்பாளராக உயர்ந்து, தற்போது வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இவர் நடிப்பதோடு மட்டுமின்றி எஸ்.கே.புரடக்‌ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். இதுதவிர பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார். 

Editor ruben gives massive update about sivakarthikeyan ayalaan movie

தற்போது இவர் கைவசம் டான், அயலான், சிங்கப்பாதை போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமாருடன் ஒரு படம், பிச்சைக்காரன் பட இயக்குனர் சசியுடன் ஒரு படம் என அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். மேலும் இந்த ஆண்டு டோலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார் சிவா.

Editor ruben gives massive update about sivakarthikeyan ayalaan movie

இதில் டான் மற்றும் அயலான் படங்களின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அயலான் படம் மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார்.

Editor ruben gives massive update about sivakarthikeyan ayalaan movie

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். எடிட்டர் ரூபன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இவ்வாறு பலமான டெக்னிக்கல் டீமுடன் தயாராகி வரும் இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார். இப்படம் சிவகார்த்திகேயனின் கெரியரில் முக்கியமான படமாக இருக்கும் என கூறியுள்ள அவர், சினிமாவில் அவரை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாகவும் அயலான் அமையும் என தெரிவித்துள்ளார்Editor ruben gives massive update about sivakarthikeyan ayalaan movie

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஏலியன் கேரக்டர் ஒன்று படம் முழுக்க பயணிக்குமாம். அந்த கேரக்டரை நவீன தொழில்நுட்பம் மூலம் வடிவமைத்துள்ளார்களாம். இது படத்திற்கு பிளஸ் ஆக அமையும் என்றும் ரூபன் தெரிவித்துள்ளார். எடிட்டர் ரூபனின் இந்த அப்டேட், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் நாளை தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் சிவகார்த்திகேயன். இதனையடுத்து பிறந்தநாள் ஸ்பெஷலாக அயலான் டீசர் வெளியாகுமா என வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் நாளை சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று Rise Of SK.. என்னும் பெயரில் அவர் குறித்த மோஷன் போஸ்டரை பிரேம்ஜி வெளியிட்டுள்ளார்..அதில் சிவகார்த்திகேயனின் வெற்றி பட கட்டவுட்கள்  இடம்பெற்றுள்ளன..மாஸ் பீஜியமும் கொடுக்கப்படுள்ளது..

 

Follow Us:
Download App:
  • android
  • ios