richagangothya tweet am not acting movies again

நடிகர் சிம்பு நடித்த வெற்றிப் படங்களில் ஒன்று ஒஸ்தி. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரிச்சா காங்கோபத்யாய். இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் தனுஷுடன் மயக்கம் என்ன படத்தில் நடித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்தப் படத்தைத் தொடர்ந்து இவருக்கு நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்தாலும், பட வாய்ப்புகளைத் தவிர்த்து விட்டார். இதற்குக் காரணம் இவர் மயக்கம் என்ன படத்தில் தனுஷுக்கு நண்பராக நடித்த சுந்தர் ராமுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டதுதான் எனக் கூறப்படுகிறது.

தற்போது அமெரிக்காவில் MBA படித்து வரும் இவரை ட்விட்டர் மூலம் ரசிகர்கள் பலர் மீண்டும் எப்போது நடிக்க வருவீர்கள் எனக் கேட்டுள்ளனர். அதற்கு ரிச்சா. இனி எப்போதும் நடிக்க வரமாட்டேன் என்பது போல் கூறியுள்ளார்.