தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'மயக்கம் என்ன' படத்திலும், நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக 'ஒஸ்தி' படத்திலும் நடித்து பிரபலமானவர் தெலுங்கு நடிகை ரிச்சா edகங்கோபாத்யாய. இவர் நடித்த இந்த இரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குறிப்பாக 'மயக்கம் என்ன' படத்திற்காக, சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது, SIIMA விருது, எடிசன் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றார். இந்நிலையில் தமிழ் திரையுலகில் இவரை பற்றி ஒரு சில வதந்திகள், கிசு கிசுவாக பரவியதால், இனி தமிழ் படங்களிலேயே நடிக்க கூடாது என முடிவெடுத்ததாக கூறப்பட்டது.

இவர் கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு 'பாய்' என்கிற தெலுங்கு படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து, MBA படிப்பதற்காக, அமெரிக்காவிற்கு சென்று அங்கு தன்னுடைய படிப்பை முடித்தார்.

இதை தொடர்ந்து, இவருக்கு கிடைத்த சில படங்களின் வாய்ப்புகளையும் ஏற்கவில்லை. இந்நிலையில், தன்னுடைய நீண்ட நாள் காதலரான அமெரிக்காவைச் சேர்ந்த ஜோ லாங்கெல்லா என்பவரை, கிறிஸ்தவ முறைப்படியும், இந்துக்கள் முறைப்படியும் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளார்.

இவரின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவ ரசிகர்கள், இவருக்கு தொடர்ந்து தங்களுடைய திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரிச்சா காங்கோபாத்யாய 2007 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.