RGV obsessed with Sridevi?

நடிகை ஸ்ரீதேவி கடந்த 24 ஆம் தேதி மதுபானம் அருந்திய நிலையில் குளியலறையில் நீர்தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். 

இவரின் மறைவு இந்திய திரையுலகினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவியின் மரண செய்தியை கேட்டு இயக்குநர் ராம்கோபால் வர்மா மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார். 

நடிகை ஸ்ரீ தேவியின் மிக பெரிய ரசிகர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் நடிகை ஸ்ரீ தேவியை வைத்து திரைப்படமும் இயக்கியுள்ளார்.

பாகுபலி திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணாவுக்கு பதில், ஸ்ரீ தேவி நடித்திருந்தால் திரைப்படம் இன்னும் பிரமாதமாக வந்திருக்கும் என சர்ச்சை ட்விட் போட்டு, ஸ்ரீ தேவிக்கு சப்போர்ட் செய்தவர் இவர்.

நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா ஸ்ரீதேவியுடனான தனது திரைப்பயணம் பயணம் குறித்து டுவிட் செய்து வருகிறார்.

கடவுள் பெருமாள் முன் ஸ்ரீதேவி மற்றும் ராம் கோபால் வர்மா நிற்பது போல ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்து, பாலாஜி அவரை மட்டும் ஏன் கொண்டு போனாய் என்னை இங்கே விட்டுவிட்டு என ஏற்கனவே பதிவு செய்திருந்தார். 

இந்நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில், ராம் கோபால் வர்மா இருட்டு அறையில் பெரிய திரையில் ஸ்ரீதேவி நடித்த பாடல் காட்சி ஒன்றை ராம் கோபால் வர்மா தனியாக பார்த்து கொண்டிருப்பது போன்ற காட்கள் இடம் பெற்றுள்ளது. 

அதில் வரும் பாடல் ஸ்ரீதேவி நடித்த ’நா ஜானே கஹான் சே ஆய் ஹாய்' படத்தின் பாடல் காட்சி.