பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்  நடிகை ரேவதி. இதைத் தொடர்ந்து ரஜினி, கமல், கார்த்தி, மோகன்,பிரபு, விஜயகாந்த்  என  80 களின் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவருடனும் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். இவர் தமிழ்ப் படங்கள் மட்டும் இன்றி இந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

 ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில்  ஒரு சில படங்களை இயக்கி, பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.  இவர், நடிப்பு... இயக்கம்... என  சினிமாத்துறை சார்ந்தவற்றில் பல்வேறு தேசிய விருதுகள் வரை பெற்று சாதனைகள் படைத்திருந்தாலும். திருமண வாழ்க்கையில் மற்றும் தோல்வியை சந்தித்தார்.

கடந்த 1986 ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திரமேனன்  என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  இனிதாகவே ஆரம்பமான  இவர்களுடைய திருமண பந்தம்  வாழ்நாள் முழுவதும் நீடிக்க வில்லை என்பது தான்  வருத்தம்.

இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2000 ஆம் ஆண்டு விவரத்து கோரி நீதிமன்றம் சென்றனர். இவர்களுக்கு 2013ஆம் ஆண்டு விவாகரத்து கொடுக்கப்பட்டது. விவாகரத்தைத் தொடர்ந்து இருவரும் தங்களுடைய பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினார்.

இந்நிலையில் ரேவதி கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு பெண்குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார் என்று கூறப்பட்டது. இது குறித்து, ரேவதியும் எதுவும் கூறாமல் இருந்து வந்த நிலையில்,  தற்போது முதல் முறையாக மஹி தன்னுடைய தத்து குழந்தை இல்லை நான்  10 மாதம் சுமந்து பெற்ற குழந்தை என கூறியுள்ளார்.

இதுகுறித்து பிரபல வார இதழுக்கு பேட்டியளித்துள்ள ரேவதி, "இதுவரை என் வாழ்க்கையில், பல பிரச்சனைகளை சந்தித்து தாண்டி வந்திருக்கிறேன். அதே போல் தாய்மை ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும் அதற்காக ஏங்கி இருக்கிறேன். அதனால் டெஸ்ட் டியூப் சிகிச்சை மூலம் குழந்தை பெற்று கொண்டேன். அந்த குழந்தை தான் மஹி. ஆனால் அவள் என் தத்து மகள் என பலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என்றும் இது குறித்து அதிகமாக நான் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இத்தனை நாள் இதனை ரகசியமாக வைத்திருந்த ரேவதி. தற்போது இதனை வெளிப்படுத்தியுள்ளார். ரேவதி தன்னுடைய 47 வயதில் கர்ப்பமடைந்த குழந்தை பெற்றதை போட்டுடைத்துள்ளார். இப்போது இவருடைய குழந்தை மஹிக்கு 5 வயது ஆகிறது குறிப்பிடத்தக்கது.