சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ரெமோ' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
முதல் முதலாக அஜித், விஜய் படங்களுக்கு இணையான ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன், ரெமோ படம் மூலம். இந்த படத்திற்கு ஏற்கனவே தணிக்கையில் 'யூ' சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைத்துள்ளது.
ரிலீசுக்கு இன்னும் ஒருசில மணி நேரமே இருக்கும் நிலையில் தமிழக அரசின் வரிவிலக்கு செய்தி கிடைத்துள்ளதால் படக்குழுவினர் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றுள்ளனர்.
30% வரிவிலக்கு என்பது தயாரிப்பாளருக்கு மட்டுமின்றி விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினர்களுக்கும் கிடைத்த நல்ல செய்தி ஆகும்.
