சிவகார்த்திகேயன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ரெமோ படத்தின் வெற்றி விழாவில், சிவகார்த்திகேயன் அழுதது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இந்நிலையில் சிவாவின் ரசிகர்கள் முதல் பலரும் சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்களை கூறி வருகின்றனர், சிவகார்த்திகேயன் வளர்ச்சியை பொறுக்காத யாரோ ஒருவர் தான் இதை செய்கிறார்கள் என கூறி வருகின்றனர்.

கண்டிப்பாக அது ஒரு நடிகர் தான் என கிசுகிசுக்கப்படுகின்றது, ஆனால், அவர் யார் என்பது தற்போது வரை சஸ்பென்ஸாக உள்ளது.

மேலும், இதில் பிரபல தயாரிப்பாளர்கள் பெயரும் அடிப்படுகின்றது, ஏனெனில் ரெமோ தயாரிப்பாளரின் வளர்ச்சி பிடிக்காதவர்கள் கூட இதை செய்யலாம் என தெரிகின்றது.