rejina casandra adicted in durgs

சிவகார்த்திகேயன் நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் 'பாப்பா' என்கிற கதாபாத்திரத்தில் சிவாவிற்கு ஜோடியாக அறிமுகமான ரெஜினாவை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் இவருக்கு பெரிதாக வாய்புகள் கிடைக்காததால், தெலுங்கிற்கு சென்றார். அங்கு இவர் நடித்த படங்கள் தொடர் வெற்றியடைந்தது. 

பின் இவர் தமிழில் தேர்தெடுத்து நடித்து 'ராஜதந்திரம்', 'மாநகரம்', 'சரவணன் இருக்க பயமேன்' உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றிப்படமாக அமைத்தால் தெலுங்கு மட்டும் இன்றி தமிழிலும் இவரை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இவர் தெலுங்கில் நடித்து வரும் 'அவே' என்ற படத்தில் இவருடன் காஜல் அகர்வால், நித்யா மேனன் உள்ளிட்ட நடிகைகளும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் ரெஜினா போதை பழக்கத்திற்கு அடிமையான பெண்ணாக நடிக்கின்றாராம், மேலும், இவருடைய கதாபாத்திரம் படத்தில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

இருப்பினும் ரெஜினா இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது அவருடைய ரசிகர்களிடம் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.