Jiiva next : இன்று ஜீவாவின் 37 வது பிறந்தநாளையொட்டி தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரியின் இளைய மகன் ஜீவா. இவர் ஆசை ஆசையாய் படத்தில் நடிகராக அறிமுகமாகி ராம், டிஷ்யும், ஈ, நண்பன், நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற 83 திரைப்படத்தில் இந்திய அணியின் விளையாட்டு வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இப்படத்தில், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தாக உறுதுணை கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார் ஜீவா.
இந்நிலையில் இன்று ஜீவாவின் 37 வது பிறந்தநாளையொட்டி தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கும் இப்படத்திற்கு ‘வரலாறு முக்கியம்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள்.

இதில் நாயகிகளாக காஷ்மீரா பர்தேஷி, ப்ரக்யா நாகரா நடிக்க சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. ஏற்கனவே, தனது அப்பா தயாரிப்பில் ‘ஆசை ஆசையாய்’, ’தித்திக்குதே’, ‘கச்சேரி ஆரம்பம்’ உள்ளிட்டப் படங்களில் ஜீவா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
