Asianet News TamilAsianet News Tamil

Khiladi​ Movie Trailer : மங்காத்தா பாணியில் வில்லனாக மிரட்டும் அர்ஜுன்! வைரலாகும் ரவிதேஜாவின் கில்லாடி Trailer

அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட கில்லாடி திரைப்படம் வருகிற பிப்ரவரி 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

Ravi teja starrer khiladi movie trailer
Author
Tamil Nadu, First Published Feb 8, 2022, 11:41 AM IST

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி தேஜா. இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான கிராக் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. கோபிசந்த் இயக்கி இருந்த இப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து ரவி தேஜா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘கில்லாடி’. ரமேஷ் வர்மா இயக்கி உள்ள இப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தியும், மீனாட்சி சவுத்ரியும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யநாராயணா தயாரித்துள்ளார்.

Ravi teja starrer khiladi movie trailer

அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் வருகிற பிப்ரவரி 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கில்லாடி படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று வெளியான இந்த டிரெய்லர், யூடியூப்பில் 2.5 மில்லியனுக்கு மேல் பார்வைகளை பெற்று டிரெண்டிங்கில் உள்ளது. டிரெய்லரைப் பார்த்து பிரம்மித்துப் போன ரசிகர்கள், அது செம்ம மாஸாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios