நரேந்திர மோடி அறிவிப்பால் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை இயல்பு நிலையை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டது.
எல்லோரும் தங்களின் தேவைக்கான பணத்தை வேலைக்கு போவதையும் விட்டு விட்டு ஏடிஎம் வரிசையிலும், வங்கி வரிசையிலும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வந்த பிரபல நடிகர் ரவி பாபு பன்றிக்குட்டியுடன் வந்துள்ளார்.
இதனால் மக்கள் அனைவரும் அவரையே பார்த்து கொண்டிருந்தனர், சில நிமிடங்களில் இந்த விஷயம் காட்டு தீ போல் பரவ மீடியாக்களும் சில அவரை பன்னிகுட்டியுடன் படம் எடுத்து வெளியிட்டுள்ளது .
இவர் இப்படி வந்ததற்கு காரணம் தற்போது இவர் 'அதுகோ' என்ற படத்தில் நடித்து வருவதாகவும் . இதில் பன்றியை மையப்படுத்தி தான் கதையே நகர்கிறதாம்.
அதனால் இந்த படத்தை விளம்பர படுத்தும் வகையில் கூட ரவி பாபு இப்படி செய்திருக்கலாம் என கிசுகிசுக்க படுகிறது.
