பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, தமிழ் கன்னடம் தெலுங்கு என  பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்

தமிழில் வெற்றிச்செல்வன் படம் மூலம் அறிமுகமானவர்.பின்னர் தோனி,  கபாலி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்

இவர் சமீபத்தில் பாலிவுட் நடிகை நேகா துபியா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது,அவர் தமிழ் படம் நடித்த போது ஒரு ஹீரோவுக்கு பளார் விட்டதாக தெரிவித்து உள்ளார்

'நான் சில தமிழ் படத்தில் நடித்தேன்..அப்போது,நான் நடித்த அந்த ஒரு பட ஹீரோ என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்....என்னை தொட்டு பேசி தவறாக நடந்துக்கொள்ள முயன்றார்...அதனால் அவரை நான் ஓங்கி கன்னத்தில் அறைந்தேன் என தெரிவித்து உள்ளார்'

இதுவரை  5  படங்களில் மட்டுமே தமிழில்  நடித்துள்ள ராதிகா ஆப்தே,  எந்த பட ஹீரோவை கன்னத்தில் அடித்தார் என்பது இதுவரை ரகசியமாகவே உள்ளது.

அந்த ஹீரோ யாராகா இருக்கும் என பலரும் யோசிக்கின்றனர்.