பல பரபரப்புக்கிடையே நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூடியது. தள்ளுமுள்ளு அடிதடி ஆகியவற்றிற்கிடையே நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலிருந்து நடிகர் ராதாரவி , சரத் குமார் , சந்திரசேகர் ஆகியோரை நிரந்தர நீக்கம் செய்து முடிவெடுத்துள்ளனர்.

 

நடிகர் சங்க நிர்வாகிகளாக சரத் குமார் , ராதாரவி உள்ளிடோர் இருந்தனர். பின்னர் நடைபெற்ற தேர்தலில் பஞ்சபாண்டவர் அணியினர் விஷால் தலைமையில் போட்டியிட்டனர். தேர்தலின் போதே அரசியல் கட்சி பொது தேர்தல் அளவுக்கு மாறி மாறி குற்றம் சாட்டிகொண்டனர்.

 தேர்தல் முடிவுகள் வந்த பிறகு விஷால் அணி வென்றது. ராதாரவி ,சரத் குமார் கையாடல் செய்ததாக கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் செயற்குழு கூட்டத்தில் அவரை இடை நீக்கவும் செய்தனர். அதன் பின்னர் விஷால் தரப்பினர் தான் தோன்றித்தனமாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

 

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவோம் என்ற நடவடிக்கை குறித்த காலத்தில் முடியவில்லை என்ற குற்றச்சாட்டும்க் எழுந்தது. ஆரம்பகாலத்தில் தீவிரமாக செயலபட்ட ரித்தீஷ் , வடிவேல் போன்றோர் ஒதுங்கினர். 

இந்நிலையில் இன்று கூடிய பொதுக்குழுவுக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் எழுந்தது. பரபரப்பான சூழ்நிலையில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் முக்கிய தீர்மானமாக வரவு செலவுக்கும் , ஸ்டார் கிரிக்கெட்டுக்கும் ஒப்புதல் வாங்கப்பட்டது. 

பின்னர் முன்னாள் நிர்வாகிகள் ராதாரவி , சரத்குமார் , வாகை சந்திரசேகரை நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கும் தீர்மானத்தை பொதுச்செயலாளர் விஷால் கொண்டு வர பொதுக்குழு ஏக மனதாக அதை ஆமோதித்தது. 

இதையடுத்து மூவரும் நடிகர் சங்கத்திலிருந்துநிரந்தரமாக நீக்கப்படுவதாக அறிவித்த விஷால் இது அவர்களுக்கு முறைப்படி கடிதம் மூலம் தெரியப்படுத்தப்படும் என்றார்.