'காக்க காக்க' படத்திற்கு பின், ஜோதிகா பள்ளி ஆசிரியையாக நடித்து வெளியான திரைப்படம் 'ராட்சசி'. இந்த படத்தை இயக்குனர் கெளதம் ராஜ் என்பவர் இயக்கி இருந்தார்.

ஜோதிகா இந்த படத்தில், கீதா ராணி என்கிற பள்ளி ஆசிரியை வேடத்தில் மிகவும் கெத்தாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியான போதே, படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.

இதை தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள 'ராட்சசி' படம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் தரமான படம் என்கிற பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வருகிறது. 'சாட்டை' படத்தின் சாராம்சம் இப்படத்தில் இருந்தாலும், சற்று வித்தியாசமான கதை என பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படம் ரிலீஸ் ஆகி 3 நாட்கள் ஆன நிலையில்,  இப்படம் சென்னையில் மட்டும் ரூ. 69 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.