நடிகை ஜோதிகா நடித்துள்ள 'ராட்சசி' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.  இந்த படத்தில் பள்ளி ஆசிரியையாக ஜோதிகா நடித்துள்ளார்.  குறிப்பாக இப்படம் நடிகர் சமுத்திரக்கனி நடித்து வெளியான 'சாட்டை' படம் போல் உள்ளது என பலரும் தொடர்ந்து விமர்சனம் செய்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

'ராட்சசி' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்ட நிலையில், சென்சார் அதிகாரிகளின் சான்றிதழுக்காக இப்படம் அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்திற்கு 'யு ' சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இதனை படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளார். இதைதொடந்து, தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Scroll to load tweet…

அதன்படி வரும் ஜூலை 5 ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ளதை உறுதிசெய்துள்ளார். இதே தேதியில் விமல்-ஓவியாவின் 'களவாணி 2' மற்றும் ஜீவாவின் 'கொரில்லா' ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளது.