சிவகார்த்திகேயன் தன்னுடைய 17 ஆவது திரைப்படத்தை, பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க 'கீதா கோவிந்தம் ' பட நடிகை ராஷ்மிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் சாதித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு படம் நிறைவு பெற்றால் மற்றொரு படத்தில் கமிட் ஆவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'சீமராஜா' திரைப்படம் தோல்வியடைந்தாலும், இவர் தயாரித்து நடித்த 'கனா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

மேலும் சிவா எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள  Mr. லோக்கல் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை அடுத்து 'நேற்று இன்று நாளை' இயக்குனருடன் ஒரு படம், இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் 'ஹீரோ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்தது தான்.

இந்த படங்களை தொடர்ந்து, நயன்தாராவின் காதலர்,  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தன்னுடைய 17 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தின் நாயகி ரஷ்மிகா மந்தனாவிடம் ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் நடிகர் கார்த்தி நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்த படம் குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.