பிரபல நடிகை வீட்டில் நள்ளிரவு நேரத்தில், பிரபல நடிகர் ஒருவர் குடித்து கும்மாளமிட்ட காட்சிகள் வெளியாகி, சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மும்பையில் கடந்த மே மாதம் நடைபெற்ற பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர், தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா திருமணத்தில், பிரபல நடிகரான ரன்பீர் கபீரும், பிரபல நடிகையான அலியா பட்டும் ஜோடியாக கலந்து கொண்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர்.

இருவரும் காதல் வலையில் விழுந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அதை உண்மை என நிரூபிக்கும் விதமாக ரன்பீர் கபீரும், அலியா பட்டும் பல இடங்களில் ஜோடியாக வலம் வந்தனர். ஏற்கெனவே சோனம் கபூர், தீபிகா படுகோனுடன் கிசுகிசுக்கப்பட்ட ரன்பீர் கபூர், கேத்ரினா கைஃபை காதலித்துப் பிரிந்தார். அதேபோல், அலியா பட்டும், சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்ததாக தகவல் வெளியானது.

இந்த ஜோடி தற்போது, காதலில் விழுந்துள்ளதால், இருவருக்கும் வரும் 2020ஆம் ஆண்டில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. அலியா பட் அண்மையில் நடித்த ராஸி படம் வெற்றிபெற்றதை அடுத்து, ரன்பீர் கபூர் நடித்த சஞ்சு படமும் பிரமாண்ட வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இருவருமே தற்போது பாலிவுட் உலகில் உச்சத்தில் இருக்கின்றனர்.

இந்த நிலையில்தான், அலியா பட் வீட்டில் ரன்பீர் கபூர் நள்ளிரவில் இருக்கும் வீடியோவும் புகைப்படங்களில் வெளியாகியுள்ளது. அவர்களுடன் அலியா பட் தந்தையும், பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான மகேஷ் பட் இருக்கிறார். இந்த வீடியோவும் புகைப்படங்களில் சமூகவலைதளங்களில் வெளியாகி, வைரலானதுடன், கிசுகிசுக்களுக்கும் தீனிப் போட்டுள்ளது