'அர்ஜுன் ரெட்டி' பட இயக்குனர் இயக்கத்தில்... ரன்பீர் கபூர் - ராஷ்மிகா நடிக்கும் 'அனிமல்' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

ரன்பீர் கபூர், சந்தீப் ரெட்டி வங்கா, பூஷன் குமார், பிரனய் ரெட்டி வங்கா, டி சீரிஸ், பத்ரகாளி பிக்சர்ஸ்  இணைந்து வழங்கும் “அனிமல்”  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. 
 

Ranbir Kapoor and rashmika staring animal first look released

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம்  தனது அறிமுக இயக்கத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை தந்து, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. அப்படத்தின் இந்தி ரீமேக்கான  “கபீர் சிங்” மூலம் பாலிவுட்டை அதிர வைத்தவர். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் படத்தை இயக்குகிறார். இந்தியா முழுமைக்கும் திரை ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும் படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

Ranbir Kapoor and rashmika staring animal first look released

இந்த புத்தாண்டு தினத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில்,  தயாரிப்பாளர்கள் அனிமல்  படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் மிரட்டலான ஆக்சன் அவதாரத்தில் ரன்பீர் கபூர் அசத்துகிறார். இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவின் இயக்கத்தில் மாறுபட்ட ஆக்‌ஷன் டிராமாவாக  இப்படம் உருவாகிறது. ரன்பீர்  முதன்முறையாக இப்படத்தில் தீவிரமான ஆக்‌ஷன் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட தலைமுடி மற்றும் அடர்த்தியான தாடியுடன், கூர்மையான கோடரியுடன் இருக்கும்  ரன்பீரின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது.  இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படம் ரசிகர்களை மிரள வைக்கும் அழுத்தமான படைப்பாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. 

'பரிவர்த்தனை' படத்தில் ஹீரோ - ஹீரோயினாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் பிரபலங்கள்!

ரன்பீர் கபூர் மற்றும் சந்தீப் ரெட்டி வாங்காவின் மாறுபட்ட காம்பினேஷனில் மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரன்பீருக்கு ஜோடியாக, நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்க, நடிகர் அனில் கபூர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.

Ranbir Kapoor and rashmika staring animal first look released

இந்தியாவின் மிகச் சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் பங்காற்றும் இத்திரைப்படம் ஆகஸ்ட் 11, 2023 அன்று இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படம் மீதான எதிர்பாப்புகளை அதிகரிக்க செய்துள்ளது. அர்ஜுன் ரெட்டி படத்தில் காதல் கலவரம் செய்த இயக்குனர் இந்த படத்தில் ரத்த கலவரம் செய்துள்ளார் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

'வாரிசு' படத்தின் ட்ரைலரை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு... போஸ்ட்டரை வெளியிட்ட ஏமாற்றம் கொடுத்த படக்குழு!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios