இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில், கடந்த ஆண்டே வெளியாக இருந்த 'காடன்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான 3 நாட்களில், 6 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. 

தன்னுடைய ஒவ்வொரு படத்திலும், இயற்கை அழகை, பசுமை மாறாமல் காட்டும் பிரபுசாலமன், இந்த படத்திலும் அதனை கன கச்சிதமாக செய்துள்ளார் என்பது ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது. யானைகளின் வாழ்விடமான காடுகளை அழித்து, கட்டிடங்கள் கட்டப்படுவதால், யானைகள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறது என்பது நேர்த்தியாக இயக்கியுள்ளார் இயக்குனர். குறிப்பாக யானைகளின் வீட்டிற்குள் மனிதர்கள் புகுந்து அட்டகாசம் என ராணா கூறும் ஒரு வார்த்தையிலேயே இந்த படத்தின் மொத்த கதையும் தெரிகிறது. மேலும் சில உண்மை சம்பவங்களும் இந்த ட்ரைலரில் இடம்பெற்றுள்ளது.

யானைகளின் காவலனாய், அவற்றை காப்பாற்ற போராடுகிறார் நடிகர் ராணா டகுபதி.  முக்கிய வேடத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். மிகப்பெரிய பொருட் செலவில், இந்த படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுக்க உள்ள அனைத்து காட்டுப் பகுதிகளிலும் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்த படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் பிரபுசாலமன். மூன்று மொழிகளிலுமே நடிகர் ராணா தான் ஹீரோவாக நடித்துள்ளார்.  கடந்த 2020 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதமே இந்த படம் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.  பின்னர் கொரோனா பிரச்சனை தலைதூக்கவே, திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியவில்லை.

பின்னர் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் ஆனாலும், 50 சதவீத இருக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் படக்குழுவும் திரைப்படத்தை வெளியிட சற்று தாமதம் காட்டி வந்தது. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மார்ச் 26ஆம் தேதி 'காடன்' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த ட்ரைலர் வெளியான 3 நாட்களில், 6 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ட்ரைலர் இதோ...