நடிகர் ராணா அஜித் நடித்த ஆரம்பம் படம் மூலம் தமிழில் அறிமுகம் கொடுத்தவர், அஜித்தின் நண்பராக அந்த படத்தில் அவர் நடித்திருந்தார், அதனை தொடர்ந்து அவர் நடித்து வெளிவந்த பாகுபலி படம், அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார்.

மேலும், உடனே அஜித்திற்கு போன் செய்து ‘சார் நான் பார்த்தது உண்மையா’ என்று அஜித்திடம் கேட்டாராம், அதற்கு அஜித் சிரித்துக்கொண்டே தன் 6 பேக் குறித்து பேசினாராம்.

இதுகுறித்து பகிர்ந்துகொண்ட ராணா ‘இது சாதாரண விஷயமில்லை, அஜித் சாரை நான் சிறு வயதிலிருந்து பார்த்துள்ளேன், அதை விட அவருடன் இணைந்து நடித்துள்ளேன்.

எனக்கு தெரியும், அவர் உடலில் எத்தனை காயங்கள் உள்ளது என, இப்படி இருக்கும் நிலையில் அவர் இத்தகைய ஒரு உடல்வாகு கொண்டு வந்தது கிரேட்’ என கூறியுள்ளார்.