பச்சை நிற சேலை கட்டி, பாதி இடுப்பு தெரிய ஒரே ஒரு போட்டோ ஷூட் நடத்தி, தன்னுடைய கிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு தமிழ் திரையுலகையே மெர்சலாக்கியவர் நடிகை ரம்யா பாண்டியன். தற்போது இந்த போட்டோ ஷூட்டுக்கு பிறகு தான் அதிக பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக பெருமிதத்தோடு கூறியுள்ளார்.

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து, அங்கேயே தன்னுடைய ஸ்கூலிங் முடித்தவர் தான் இந்த ரம்யா பாண்டியன். இவர் ஆசைப்பட்டு படிக்க நினைத்த படிப்பு இவரை சென்னைக்கு கொண்டு வந்து சேர்த்தது. 

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படித்தார். படித்து கொண்டிருக்கும் போதே, சில நண்பர்கள் மூலம் குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் முதலில் நடித்தது 'மானே தேனே பொன்மானே' என்கிற குறும்படம் தான். இதில் இவருடைய நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றது.

இதனால், ரம்யா பாண்டியனுக்கு சினிமாவில் நடிகையாக வேண்டும் என்கிற ஆசை மனதில் துளிர்விடவே, படவாய்ப்புகளை தேட துவங்கினார். 

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கடந்த 2016 ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படமான, 'ஜோக்கர்' படத்தில்  நடிக்க ரம்யா பாண்டியனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்காக ஒரு சில விருதுபட்டியலிலும் இடம் பிடித்தார் ரம்யா பாண்டியன்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 'ஆண் தேவதை' படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.  தற்போது டம்மி தப்பாசு, கூந்தலும் மீசையும், ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சிறு பட்ஜெட் படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைத்தாலும், முன்னணி நடிகர்கள் கண்ணில் படாத நடிகையாகவே இருந்து வந்தார். மேலும் பட வாய்ப்புகளும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான், தன்னுடைய இடுப்பு அழகை காட்டி, கவர்ச்சிக்கு குறைவில்லாமல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி...  ஒட்டு மொத்த திரையுலகையும் இவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இந்த புகைப்படத்தை வெளியிட்ட ராசி, ரம்யா பாண்டியன் காட்டில் பட மழை பொழிந்து வருகிறது.

இதுகுறித்து கூறியுள்ள, நடிகை ரம்யா பாண்டியன் போட்டோ ஷூட்டுக்கு பிறகு தான், தனக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாக பெருமிதத்தோடு கூறியுள்ளார்.